தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிறுவனுக்கு தவறான ஆப்பரேஷன் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு

சிறுவனுக்கு தவறான ஆப்பரேஷன் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு

சிறுவனுக்கு தவறான ஆப்பரேஷன் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை எம்.ஜி.பி., 2வது வடக்குத் தெரு ஷேக் அப்துல் சலாமின் மகன் ரஹீம் 15, நவ.17 விபத்தில் சிக்கி வலது காலில் காயமடைந்தார். அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நவ.23 வலது காலில் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சைக்காக ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்து பார்த்த போது, வலது காலுக்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுவனின் தந்தை டாக்டர்களிடம் கேட்டபோது அறுவை சிகிச்சை செய்த மூத்த டாக்டர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இடது காலில் பொருத்திய ஸ்குருக்களை அகற்றும் போது வலி நிவாரண ஊசி செலுத்தாமல் சிகிச்சை அளித்ததாகவும் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து ஷேக் அப்துல் சலாம் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது பி.என்.எஸ்., பிரிவுகள் 125, 351, 127, 118(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us