/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவர்களிடையே ஜாதி மோதல் சம்பவம் திருநெல்வேலியில் டி.ஜி.பி., ஆலோசனை
/
மாணவர்களிடையே ஜாதி மோதல் சம்பவம் திருநெல்வேலியில் டி.ஜி.பி., ஆலோசனை
மாணவர்களிடையே ஜாதி மோதல் சம்பவம் திருநெல்வேலியில் டி.ஜி.பி., ஆலோசனை
மாணவர்களிடையே ஜாதி மோதல் சம்பவம் திருநெல்வேலியில் டி.ஜி.பி., ஆலோசனை
ADDED : செப் 28, 2024 02:56 AM
திருநெல்வேலி:தென்மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடையே தொடர்ந்து நடந்து வரும் ஜாதி மோதல்கள் குறித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால், திருநெல்வேலியில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடந்தது.
இதில் டி.ஜி.பி.,யுடன் தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, டி.ஐ.ஜி.,மூர்த்தி, எஸ்.பி.,க்கள் திருநெல்வேலி சிலம்பரசன், தென்காசி சீனிவாசன், தூத்துக்குடி ஆல்பர்ட் ஜான், கன்னியாகுமரி சுந்தரவதனம் மற்றும் திருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனர்கள் அனிதா, கீதா, விஜயகுமார் மற்றும் உதவி ஐ.ஜி. ஸ்ரீநாத் பங்கேற்றனர்.
தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஜாதி மோதல் தொடர்பான வன்கொடுமைகள், சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையும் நடந்து வரும் ஜாதி மோதல்கள், வகுப்புகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வருவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சி.ஐ.டி., உணவுப் பொருள் கடத்தல், லஞ்ச ஒழிப்பு போலீஸ் உள்ளிட்ட மற்ற பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்று திருநெல்வேலியில் ஆயுதப்படை வளாகத்தில் போலீசாரிடம் குறைகளை கேட்டு மனு பெறுகிறார்.