ADDED : ஜன 14, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: பாளை ஜான்ஸ் கல்லுாரி மைதானத்திற்கு நேற்று நள்ளிரவில் ஒரு தரப்பினர் குறிப்-பிட்ட இடத்தை சுற்றி வேலி அமைத்து கற்களை நாட்டினர். தொடர்ந்து ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.
இந்த தகவல் காலையில் கிறிஸ்தவ மக்களுக்கு தெரிய வர உடனே பலரும் அங்கு குவிந்தனர். அங்கு போடப்பட்டிருந்த வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டன. கண்கா-ணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டன.
தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

