/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவி குறித்து அவதுாறு பதிவு; கல்லுாரி முதல்வர், கணவர் கைது
/
மாணவி குறித்து அவதுாறு பதிவு; கல்லுாரி முதல்வர், கணவர் கைது
மாணவி குறித்து அவதுாறு பதிவு; கல்லுாரி முதல்வர், கணவர் கைது
மாணவி குறித்து அவதுாறு பதிவு; கல்லுாரி முதல்வர், கணவர் கைது
ADDED : ஜன 07, 2026 05:25 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லுாரியில் மாணவி குறித்து சமூக வலைதளங்களில் ஆபாச , அவதுாறு கருத்துகள் பதிவிட்டதாக கல்லுாரி முதல்வர் சுமிதா மற்றும் அவரது கணவர் பொன்னுதுரையை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி பழைய பேட்டையில் செயல்படும் இக்கல்லுாரியில் புத்தகங்களுக்கான கட்டண உயர்வு குறித்து மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்காக முதுகலை 2-ம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவி குறித்து மீது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதுாறாக பதிவிடப்பட்டது. இதுகுறித்து அம்மாணவி கடந்த மாதம் 16ம் தேதி திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளப் பதிவுகள் கல்லுாரி முதல்வரின் வலைதள முகவரியிலிருந்து வெளியிடப்பட்டதை உறுதி செய்தனர். 20 நாட்கள் விசாரணைக்குப் பின், நேற்றுகாலை அவரையும், கணவரையும் விசாரணைக்கு அழைத்த போலீசார், 8 மணி நேரத்திற்குபின் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ஸ்டேஷன் ஜாமினிலேயே விடுவித்தனர். மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டிய முதல்வர் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு பதிவிடலாமா என சர்ச்சை ஏற்பட்டது. அவரது கணவர் பொன்னுதுரை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார்.

