/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை ரயிலை கவிழ்க்க சதி வீடு வீடாக போலீசார் சோதனை
/
நெல்லை ரயிலை கவிழ்க்க சதி வீடு வீடாக போலீசார் சோதனை
நெல்லை ரயிலை கவிழ்க்க சதி வீடு வீடாக போலீசார் சோதனை
நெல்லை ரயிலை கவிழ்க்க சதி வீடு வீடாக போலீசார் சோதனை
ADDED : பிப் 23, 2024 02:33 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி தொடர்பாக ரயில்வே மற்றும் உள்ளூர் போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் காந்திதாமில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே கவிழ்க்க சதி நடந்தது. ரயில் வேகம் குறைவாக வந்ததால் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் 15 நிமிடம் அந்த பகுதியில் ரயில் நின்ற பின்னர் புறப்பட்டு சென்றது. சம்பவ இடத்தில் ரயில்வே உளவு போலீசார், ரயில்வே குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் ஆய்வு நடத்தினர். எனினும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதில் ஈடுபட்டவர்கள் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதி செய்துள்ள போலீசார் நேற்று இரண்டாவது நாளாக வீடு வீடாக சோதனை நடத்தினர். கற்கள் மீது ரயில் மோதி நின்றதும் சிலர் பைக்குகளில் புறப்பட்டு செல்வதை பார்த்ததாக லோகோ பைலட் கூறியதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
புதர் நிறைந்த இப்பகுதியில் மது குடிப்பதற்காக வந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளில் உள்ள கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் ரயில் பயணிகளுக்கும், ரயில் போக்குவரத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் குற்ற செயல் புரிந்ததாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.