/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கல்லுாரியில் பாதிரியாரின் ஜாதி பாடலால் சர்ச்சை
/
கல்லுாரியில் பாதிரியாரின் ஜாதி பாடலால் சர்ச்சை
ADDED : பிப் 20, 2025 01:40 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் பாதிரியார் பாடிய ஜாதி ரீதியான பாடலுக்கு மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் உள்ள பழமையான அரசு உதவி பெறும் கல்லூரியில் விழாக்கள் நடக்கும் அரங்கில் ஒரு பாதிரியார் அண்மையில் வெளியான ஒரு சினிமா படத்தின் பாடலை பாடினார். ஒரு தரப்பு மாணவர்கள் எழுந்து நின்று கோஷமிட்டு ஆடி பாடினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே ஜாதி ரீதியான மோதல்கள் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் அனைவருக்கும் பொதுவான ஒரு கல்லூரியில் ஜாதி ரீதியான பாடல்களை மாணவர்களியே பாடி பதற்றத்தை ஏற்படுத்தும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

