ADDED : பிப் 10, 2026 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: சமையல் தொழிலாளியை வெட்டி கொன்ற மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாணாங்குளத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி, 50; சமையல் தொழிலாளி. இவரது மனைவியும் மகனும், கேரளாவில் தங்கி, வடை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியே வசித்த இசக்கிபாண்டி, நேற்று இரவு, வீட்டருகே, தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். மூன்றடைப்பு போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.

