/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூட்டுறவு சங்க மோசடி செயலர் சஸ்பெண்ட்
/
கூட்டுறவு சங்க மோசடி செயலர் சஸ்பெண்ட்
ADDED : ஆக 29, 2025 05:38 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த நிதி மோசடி தொடர்பாக செயலாளர் பாலகிருஷ்ணன் 55, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஏர்வாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பலரும் நகை கடன் பெற்றுள்ளனர். நகை கடன் பெற்றவர்களிடம் அங்கு நீண்ட காலமாக செயலாளர் பொறுப்பில் இருந்த பாலகிருஷ்ணன் நிதி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணைக்கு பின் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.
போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகை கடனில் நிதி மோசடி நடந்திருப்பது குறித்து தகவல் அறிந்ததும் விசாரணைக்குப் பிறகு பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முறைப்படி விசாரணை நடக்கிறது என்றார்.

