/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மருத்துவமனையாக செயல்பட்ட வீட்டிற்கு மாநகராட்சி 'சீல்'
/
மருத்துவமனையாக செயல்பட்ட வீட்டிற்கு மாநகராட்சி 'சீல்'
மருத்துவமனையாக செயல்பட்ட வீட்டிற்கு மாநகராட்சி 'சீல்'
மருத்துவமனையாக செயல்பட்ட வீட்டிற்கு மாநகராட்சி 'சீல்'
ADDED : டிச 30, 2025 06:30 AM

பெருமாள்புரம்: திருநெல்வேலி பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லுாரி சாலையில் விக்ரம் ஆதித்யன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் டாக்டர் ராஜா எஸ்.விக்னேஷ் என்பவர், 2022 முதல், 'நிம்ஸ் மருத்துவமனை' என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தார். வீட்டின் சமையலறை மருந்தகமாகவும், படுக்கையறைகள் அறுவை சிகிச்சை அறைகளாகவும் மாற்றப்பட்டிருந்தன.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும் அக்கட்டடத்தில் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பரில் மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரத்துறை உள்ளிட்ட உரிய துறைகளின் அனுமதி இன்றி மருத்துவமனை இயங்கியது உறுதியானது.
இதனால், 30 நாட்களுக்குள் மருத்துவமனையை மூட, 'நோட்டீஸ்' வழங்கப் பட்டது. அந்த உத்தரவை தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்ட கட்டடத்திற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

