தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ இரட்டை கொலை தம்பதிக்கு 'காப்பு'

 இரட்டை கொலை தம்பதிக்கு 'காப்பு'

 இரட்டை கொலை தம்பதிக்கு 'காப்பு'


ADDED : அக் 01, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: நிலத்தகராறில், அண்ணன், தம்பியை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில், செந்தில்குமார், 43, அவரது மனைவி ரஞ்சிதா, 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி டவுன், மணிப்புரத்தை சேர்ந்த டால்டன், 71, அவரது அண்ணன் நிக்கோலஸ் ராஜரத்தினம், 75, ஆகியோருக்கு, நல்லமாடசாமி கோவில் அருகே உள்ள பாதையை பயன்படுத்துவதில், செந்தில்குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம், இருவரையும் செந்தில்குமார் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். போலீஸ் கமிஷனர் சேகர் சஞ்சய் தேஷ்முக், அதிகாரிகள் விசாரித்தனர். சம்பவத்தில் காயமடைந்த செந்தில்குமார், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் செந்தில்குமார், அவரது மனைவி ரஞ்சிதா ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us