ADDED : ஏப் 16, 2026 02:42 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த மாணவரிடம் ரூ.80,000 மதிப்புள்ள ஐபோனை திருடிய கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த அஸ்வின் 17, தனது நண்பர்கள் 9 பேருடன் கும்பகோணம் சென்று விட்டு நாகர்கோவிலுக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பினார்.
ஏப்.12 அதிகாலை பயணத்தில் இருந்த போது தனது ஐபோனை 'சீட்'இல் வைத்து 'சார்ஜ்' போட்டுள்ளார். திருநெல்வேலி அருகே ரயில் வந்தபோது ஐபோன் திருடு போனது தெரிந்தது. ரயில்வே போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது.
திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர்.
அவர் கடலுார் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த ராஜ்குமார் 35, என்பதும், அஸ்வினின் ஐபோனை அவர் திருடியதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து ஐபோனை மீட்டனர்.
