/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பட்டியலின மாணவனுக்கு வெட்டு; நெல்லையில் அடங்காத ஜாதிய 'தீ'
/
பட்டியலின மாணவனுக்கு வெட்டு; நெல்லையில் அடங்காத ஜாதிய 'தீ'
பட்டியலின மாணவனுக்கு வெட்டு; நெல்லையில் அடங்காத ஜாதிய 'தீ'
பட்டியலின மாணவனுக்கு வெட்டு; நெல்லையில் அடங்காத ஜாதிய 'தீ'
ADDED : நவ 04, 2024 11:22 PM

திருநெல்வேலி ; திருநெல்வேலியில் பட்டியலின மாணவரை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. கட்டட தொழிலாளி. அவரது மனைவி சுகந்தி. ஓட்டல் பணியாளர். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர். நேற்று இருவரும் பணிக்கு சென்று விட்டனர். இவர்களது 2வது மகன் மனோஜ்குமார் 17. பாலிடெக்னிக் மாணவர். நேற்று மதியம் வீட்டு முன் அவர் நடந்து சென்ற போது திருமலைக்கொழுந்து புரத்திற்கு கார்களில் ஒரு கும்பல் வேகமாக சென்றுள்ளது. மனோஜ்குமார் மீது மோதிச் செல்வது போல சென்றதால் அவர் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற கும்பல் மாலையில் திரும்பி வரும்போது வீட்டில் தனியே இருந்த மனோஜ்குமாரின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
பலத்த காயமுற்ற மனோஜ்குமார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜாதி ரீதியாக நடந்த இந்த மோதல் குறித்து நடவடிக்கை எடுக்க அவரது பெற்றோர் வலியுறுத்தினர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

