/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை மாநகராட்சி முறைகேடுகள் பற்றி புகார் கூறியவருக்கு வெட்டு: சமூக விரோதி அட்டூழியம்
/
நெல்லை மாநகராட்சி முறைகேடுகள் பற்றி புகார் கூறியவருக்கு வெட்டு: சமூக விரோதி அட்டூழியம்
நெல்லை மாநகராட்சி முறைகேடுகள் பற்றி புகார் கூறியவருக்கு வெட்டு: சமூக விரோதி அட்டூழியம்
நெல்லை மாநகராட்சி முறைகேடுகள் பற்றி புகார் கூறியவருக்கு வெட்டு: சமூக விரோதி அட்டூழியம்
ADDED : மே 04, 2024 11:05 AM

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி முறைகேடு பற்றி புகார் கூறிய சமூக ஆர்வலரை, மர்ம நபர் இன்று (மே 04) காலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருநெல்வேலி பாளை, மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பெர்டின் ராயன் 35. கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். சமூக ஆர்வலராகவும் உள்ளார். திருநெல்வேலியில் முறைப்படி அனுமதி பெறாமல் கட்டி திறக்கப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மாநகராட்சியில் அனுமதி பெறாத கட்டடங்கள் குறித்தும், பல்வேறு முறைகேடுகள் குறித்தும் தகவல் பெறும் உரிமை மூலம் தகவல் பெற்று வழக்கு தொடர்ந்து உள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் ரோடு காண்ட்ராக்ட் தனியார் நிறுவனம் முறைகேடாக அனுமதிக்கப்பட்டதை கண்டித்து புகார் தெரிவித்து இருந்தார். அது தொடர்பான வழக்கில் இன்று காலை அவர் திருநெல்வேலி ஜங்ஷன் போலீசில் சாட்சி விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தார். இன்று( மே 04) மேலும் ஒரு மின்வாரிய வழக்கிலும் அவர் சாட்சி கூற இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தனியார் பேட்மின்டன் கிளப்பில் விளையாட சென்ற போது அரங்கில் நுழைந்த ஒரு நபர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தலை, முதுகு, கைகளில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஐகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.