நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அங்குள்ள ஒரு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
நேற்றிரவு அவரை மூன்று பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. பலத்த காயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளது. நாங்குநேரி போலீசார் அவரை வெட்டியவர்களை தேடி வருகின்றனர்.

