/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை
/
மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை
ADDED : மார் 20, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலியில் மகள் காதலித்து வேறு சமூக வாலிபரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி ஜங்ஷன் மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் குமார் 46. பெயிண்டர். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அங்குள்ள கோயிலில் பூஜாரியாக பணியாற்றியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள். இதனால் மனமுடைந்த குமார் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தச்சநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.