/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரிவாள் கொண்டு வந்த பள்ளி மாணவருக்கு 'டிசி'
/
அரிவாள் கொண்டு வந்த பள்ளி மாணவருக்கு 'டிசி'
ADDED : செப் 25, 2024 01:41 AM
திருநெல்வேலி,:திருநெல்வேலி டவுனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு புத்தகப்பையுடன் அரிவாள் கொண்டு வந்த மாணவருக்கு நிர்வாகம் உடனடியாக 'டிசி'யை வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையேயும் ஜாதி ரீதியான போக்கு அதிகரித்துள்ளது. நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பள்ளிகளில் அவர்கள் ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தினமும் மாணவர்களை கண்காணிக்கும் பணி நடக்கிறது.
திருநெல்வேலி டவுனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளிக்கு புத்தகப் பையுடன் அரிவாள் கொண்டு வந்தார். ஆசிரியர்கள் பையில் சோதனையிட்ட போது அரிவாளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புக்காக அதனை கொண்டுவந்ததாக விசாரணையில் தெரிவித்தார். பெற்றோரை பள்ளிக்கு அழைத்து கண்டித்து மாணவரை பள்ளியிலிருந்து வெளியேற்றி 'டிசி' (மாற்றுச் சான்றிதழ்) வழங்கப்பட்டது.