sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 வணிக மனைகளை விற்க இ - ஏலம் நடத்த முடிவு

/

 வணிக மனைகளை விற்க இ - ஏலம் நடத்த முடிவு

 வணிக மனைகளை விற்க இ - ஏலம் நடத்த முடிவு

 வணிக மனைகளை விற்க இ - ஏலம் நடத்த முடிவு


ADDED : டிச 16, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 16, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், வணிக மனைகளை, இ - ஏலம் வாயிலாக விற்பனை செய்யும் பணிகளை வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது.

தமிழகத்தில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில், கடைகள், அங்காடிகள், பள்ளிக்கூடம், சமுதாய கூடம் ஆகியவற்றுக்கு மனைகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த மனைகளை உரிய காரணங்களுக்கு பயன்படுத்த விற்பனை செய்ய வேண்டும். யாரும் வாங்க முன்வராததால், இந்த மனைகள் அப்படியே உள்ளன.

தற்போது விற்பனையாகாமல் உள்ள இந்த மனைகளை விற்கும் பணிகளை வீட்டுவசதி வாரியம் முடுக்கி விட்டுள்ளது. இதன்படி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், 17 இடங்களில் வணிக மனைகளை விற்பதற்கான அறிவிப்பை, வாரியம் வெளியிட்டுள்ளது.

மூன்று இடங்களில் பள்ளிக்கூடம், ஒரு சமுதாய கூடம் என, இந்த மனைகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றை வாங்க விரும்புவோர், இ - ஏலத்தில் பங்கேற்க, ஆன்லைனில் பதிவு செய்யலாம் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us