/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை போஸ்ட்மேன் கொலை வழக்கு வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் சரண்
/
நெல்லை போஸ்ட்மேன் கொலை வழக்கு வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் சரண்
நெல்லை போஸ்ட்மேன் கொலை வழக்கு வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் சரண்
நெல்லை போஸ்ட்மேன் கொலை வழக்கு வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் சரண்
ADDED : ஆக 24, 2011 02:37 AM
திருநெல்வேலி : நெல்லையில் போஸ்ட்மேன் கொலை வழக்கில் தேடப்பட்ட மேலும் ஒருவர் வள்ளியூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி(40). தச்சநல்லூர் போஸ்ட்ஆபீசில் போஸ்ட்மேனாக இருந்தார். கடந்த 20ம்தேதி மதியம் பெரியசாமி தச்சநல்லூர் பாலாஜி அவென்யூ 5வது தெருவில் ஒரு வீட்டுக்கு தபால் கொடுக்க சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த சிலர் பெரியசாமியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். 2008ம்ஆண்டு தேனீர்குளத்தை சேர்ந்த கருப்பசாமி, அவர் மகன் இசக்கி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் எதிரொலியாக போஸ்ட்மேன் பெரியசாமி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக இசக்கி, அவர் சகோதரர்கள் ஆட்டோ டிரைவர் சங்கர், பால் வியாபாரி ஆறுமுகம், அவர் நண்பர்கள் தச்சநல்லூர் டவுன் ரோட்டை சேர்ந்த குருபாபு, ஜோசப் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குருபாபு, ஜோசப் கைது செய்யப்பட்டனர். ஆறுமுகம் நேற்றுமுன்தினம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். சங்கர் வள்ளியூர் ஜே.எம்.கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.