/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நவராத்திரி விழா 28ம் தேதி துவக்கம் களை கட்டியது கொலு பொம்மை விற்பனை
/
நவராத்திரி விழா 28ம் தேதி துவக்கம் களை கட்டியது கொலு பொம்மை விற்பனை
நவராத்திரி விழா 28ம் தேதி துவக்கம் களை கட்டியது கொலு பொம்மை விற்பனை
நவராத்திரி விழா 28ம் தேதி துவக்கம் களை கட்டியது கொலு பொம்மை விற்பனை
ADDED : செப் 22, 2011 12:51 AM
திருநெல்வேலி : நவராத்திரி விழாவை முன்னிட்டு நெல்லையில் கொலு பொம்மைகள்
விற்பனை படுஜோராக நடந்துவருகிறது.
நவராத்திரி விழா மஹோத்ஸவம் வரும் 28ம்
தேதி துவங்கி அக்.6ம் தேதி வரை நடக்கிறது. நவராத்திரியை முன்னிட்டு
நெல்லையில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது. நெல்லை ஜங்ஷன்
பூம்புகார் விற்பனை மையத்தில் விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்து
இறங்கியுள்ளன. கொலு பொம்மைகளை ஏராளமான பொதுமக்கள் பார்த்து வாங்கி
செல்கின்றனர். நெல்லை ஜங்ஷன் அங்குவிலாஸ் பில்டிங் வாசல், ஜங்ஷன்
பகுதிகளிலும், நெல்லை டவுன் பகுதிகளிலும் பிளாட்பாரங்களில் கொலு விற்பனை
களை கட்டியுள்ளது. நெல்லை ஜங்ஷன் வரதராஜபெருமாள் கோயில் தெரு பகுதி ரோட்டோர
கொலு விற்பனை கடைகளில் பாண்டுரெங்கன், கருடவாகனம், கைலாய மலை செட்,
சஞ்சீவிமலை செட், நரசிம்மர் செட், தசாவதாரம் செட், ரெங்கமன்னார் செட்,
லலிதாம்பிகை செட், அஷ்டலெட்சுமிகள், ஹயக்கீரிவர், கிரிவலம் செட், குபேரர்,
மகான்கள் ராகவேந்திரர், சாய்பாபா, சுதந்திர போராட்ட வீரர்கள் பாரதியார்,
வ.உ.சி., மகாத்மா காந்தி உள்ளிட்ட சிலைகளும், செட்டியார், கடைகள்,
விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு
புதுவரவாக ராமர், சேதுபாலத்தை குறிக்கும் வகையில் சேதுபந்தணம் செட்
விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.50 முதல் ரூ.2 ஆயிரம் வரையில் கொலு பொம்மைகள்
விற்கப்படுகின்றன. நவராத்திரி விழா துவங்குவதை முன்னிட்டு நெல்லையில் கொலு
பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது.