/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மது விருந்தில் தகராறு: காதை வெட்டிய ஏட்டு
/
மது விருந்தில் தகராறு: காதை வெட்டிய ஏட்டு
ADDED : டிச 27, 2025 04:31 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் டைசன் துரை 38.
இவரது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டவர் மெர்லின் 32. சட்டக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர். நேற்று முன்தினம் இரவு பாளையஞ்செட்டிகுளத்தில் ஒரு தோட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மது விருந்தில் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது மெர்லின் நண்பர்கள் நான்கு பேரை அங்கு அழைத்துச் சென்றார். அனைவரும் மது அருந்தினர்.
அப்போது, மெர்லினின் நண்பர்களிடம் டைசன் துரை “உங்கள் ஜாதி என்ன” எனக் கேட்டு வாக்குவாதம் செய்தார். மெர்லின் தடுக்க முயன்றபோது, ஆத்திரமடைந்த டைசன் துரை அரிவாளால் மெர்லினை வெட்டினார்.
அவரது காதுப் பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. நண்பர்கள் மெர்லினை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். டைசன் துரை தலைமறைவாகி விட்டார்.

