நான்குநேரி அருகேயுள்ள உன்னங்குளத்தில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை எம்எல்ஏ நாராயணன் பார்வையிட்டார்.
நான்குநேரி அருகேயுள்ள உன்னங்குளத்தில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை எம்எல்ஏ நாராயணன் பார்வையிட்டார்.
ADDED : ஜன 22, 2013 04:14 AM
நான்குநேரி:நான்குநேரி யூனியன் உன்னங்குளத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை எம்எல்ஏ நாராயணன் பார்வையிட்டார்.
நான்குநேரி யூனியன் உன்னங்குளம் கிராமத்தில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்களை நான்குநேரி எம்எல்ஏ நாராயணன் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான சிகிச்சை எடுக்க மருத்துவ துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருந்துகள் வழங்கி நோயை கட்டுப்படுத்தவும் சுகாதார சீர்கேட்டை அகற்றவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை இயக்குனர் உமா, வட்டார மருத்துவ அலுவபலர் முகமதுகனி, டாக்டர் வரதராஜன், மாவட்ட மலேரியா அலுவலர் ஆனந்தன், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் வக்கி வைடுரியம், டாக்டர் ரமேஷ், பொது மருத்துவ நிபுணர் ராமராஜன், ச.ம.க., பாளை தொகுதிசெயலாளர் வக்கீல் கணேசன், முத்துக்குட்டி, ஒன்றிய செயலாளர்கள் பழனிமுருகன், பரமசிவன், ச.ம.க., நிர்வாகிகள் சார்லஸ், முருகேசன், மரியதாசன், ஜோசப், பார்த்திபன், மரியசிலுவை, ரகு. ஆசிரியர் ஜான், முத்து உட்பட பலர் உடன் சென்றனர்.
