/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாநகராட்சியில் குடியரசு தின விழா தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

ADDED : ஜன 27, 2024 02:18 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி தி.மு.க., மேயர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநகராட்சியில் நேற்று நடந்த குடியரசு தின விழாவை அக்கட்சி கவுன்சிலர்களே புறக்கணித்தனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தின விழா கொடியேற்றம் நடந்தது. மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, கமிஷனர் தாக்கரே மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தி.மு.க., மேயருக்கு எதிராக ஜன.,12ல் தி.மு.க., கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஓட்டெடுப்புக்கு முன்பே யாரும் பங்கேற்காததால் ரத்தானது. நேற்று நடந்த குடியரசு தின விழாவில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் பெரும்பான்மையானோர் வராமல் புறக்கணித்தனர்.
இதற்கிடையில் ஜன., 30 மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடக்கிறது. அதிலும் மேயருக்கு எதிராக தி.மு.க.,வினர் செயல்பட வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.