இரட்டை கொலை குற்றவாளிகள் விரைவில் கைது: எஸ்.பி., உறுதி
இரட்டை கொலை குற்றவாளிகள் விரைவில் கைது: எஸ்.பி., உறுதி
ADDED : ஜூலை 03, 2026 11:26 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை, மகன் வெட்டிக்கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப் படுவர் ,'' என எஸ்.பி., விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி தெரிவித்தார்.
கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த சித்திரபுத்திரன், பெருமாள்பாண்டியன் ஆகிய இரு தரப்பினர் இடையே 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது.இதில் பெருமாள்பாண்டியன் கொலை செய்யப்பட்ட நிலையில் பழிவாங்கும் வகையில் சித்திரபுத்திரனின் மகன் காளிமுத்து, அவரது 5 வயது மகன் ஜெயராஜை கும்பல் ஒன்று வெட்டிக்கொலை செய்தது. காளிமுத்துவின் மற்றொரு மகன் சின்னதுரை மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்.
இதன் வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி எஸ்.பி., விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி கூறியதாவது: கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு கிடைக்கும் தகவல்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் முன்விரோதத்தின் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர்,சாட்சிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அசம்பாவிதம் நடைபெறாத வகையில் டி.எஸ்.பி., தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
