ADDED : ஜூலை 07, 2026 12:53 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகே காளிமுத்து 40, அவரது 5 வயது மகன் ஜெயராஜ் கொலையில் கைது செய்யப்பட்ட ராஜதுரை, கிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட் டது.
இதில் கைது செய்யப்பட்ட ராஜதுரை போலீஸ் காவலில் இருந்தபோது கழிப்பறைக்கு சென்றபோது தவறி விழுந்து கையில் காயமடைந்தார்.
இதேபோல் கைதான கிருஷ்ணன் தப்பி ஓட முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இக் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடக்கிறது.
