/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்
/
பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்
ADDED : ஏப் 05, 2025 02:53 AM

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து நேற்று அதிகாலை, 5:00க்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்ட அரசு பஸ்சை, கடையநல்லுாரைச் சேர்ந்த டிரைவர் மாரியப்பன், 55, ஓட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பஸ் ஸ்டாண்டில் பயணியரை இறக்கிவிட்டு, தெற்கு மெயின் ரோட்டில் சென்றபோது, மாரியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரமாக நிறுத்தி, மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார்.
அவரை அருகில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர்கள், அவர் இறந்ததாக கூறினர்.
பஸ்சில், 52 பயணியர் இருந்தபோதும், எவருக்கும் பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக பஸ்சை நிறுத்திய டிரைவரின் செயல், அவரது பொறுப்புணர்வை வெளிப்படுத்திய போதும், அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தியது.