/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆசிரியர்கள் பணப்பலன் கையாடல்; கல்வித்துறை உதவியாளர் கைது
/
ஆசிரியர்கள் பணப்பலன் கையாடல்; கல்வித்துறை உதவியாளர் கைது
ஆசிரியர்கள் பணப்பலன் கையாடல்; கல்வித்துறை உதவியாளர் கைது
ஆசிரியர்கள் பணப்பலன் கையாடல்; கல்வித்துறை உதவியாளர் கைது
UPDATED : ஜன 13, 2026 09:55 AM
ADDED : ஜன 12, 2026 06:40 AM

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதுாரை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவர் மேலநீலிதநல்லுார் வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தபோது ஆசிரியர்களின் கையொப்பங்களை போலியாக போட்டு ரூ.40 லட்சத்திற்கு மேல் தனது வங்கி கணக்கில் வரவு வைத்ததாக தென்காசி மாவட்ட ஆசிரியர் கூட்டணி செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா புகார் அளித்திருந்தார்.
அவர் அதன் பிறகு வாசுதேவநல்லுார் தொடக்க கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் இதே போல நிதி முறைகேடு செய்துள்ளார். இதையடுத்து தொடக்க கல்வி இயக்குனரின் உத்தரவில் அதிகாரிகள் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு ஜனவரியில் அவரை சஸ்பெண்ட் செய்தனர்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணைக்குப் பிறகு நேற்று சவுந்தரபாண்டியனை கைது செய்தனர்.