sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 ஆசிரியர்களின் பணம் கையாடல் கல்வித்துறை ஊழியர் கைது

/

 ஆசிரியர்களின் பணம் கையாடல் கல்வித்துறை ஊழியர் கைது

 ஆசிரியர்களின் பணம் கையாடல் கல்வித்துறை ஊழியர் கைது

 ஆசிரியர்களின் பணம் கையாடல் கல்வித்துறை ஊழியர் கைது


ADDED : ஜன 12, 2026 06:36 AM

Google News

ADDED : ஜன 12, 2026 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: வாசுதேவநல்லுார் வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த சவுந்தரபாண்டியன், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற பணப்பலன்களில் கையாடல் செய்த வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதுாரை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர், மேலநீலிதநல்லுார் வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார்.

அப்போது, ஆசிரியர்களின் கையொப்பங்களை போலியாக போட்டு, 40 லட்சம் ரூபாயை தன் வங்கி கணக்கில் வரவு வைத்ததாக, தென்காசி மாவட்ட ஆசிரியர் கூட்டணி செயலர் செய்யது இப்ராஹிம் மூசா, புகார் அளித்திருந்தார்.

பின் அவர், வாசுதேவநல்லுார் தொடக்க கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் இதே போல நிதி முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சவுந்தர பாண்டியனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us