சர்ச் கட்டுமானத்துக்கு எதிராக போராடிய முதியவர் பலி
சர்ச் கட்டுமானத்துக்கு எதிராக போராடிய முதியவர் பலி
ADDED : பிப் 27, 2026 05:14 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே ஏறாந்தையில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒருவரால், வணிக வளாகம் கட்ட அனுமதி பெறப்பட்டது. பின்னர், அதை சர்ச்சாக மாற்ற முயற்சி நடப்பதாக, மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தாரிடம் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அதிகாரிகள், 'சர்ச் கட்ட அனுமதி இல்லை' என கூறியி ருந்தநிலையில், நேற்று மீண்டும் சர்ச் கட்டுமானப் பணிகள் துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள், உச்சிமாகாளி அம்மன் கோவில் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற மணிவேல், 65, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
மணிவேல் உடலை வாங்க, எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
