/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: பொட்டலூரணி மக்கள் முடிவு
/
மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: பொட்டலூரணி மக்கள் முடிவு
மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: பொட்டலூரணி மக்கள் முடிவு
மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: பொட்டலூரணி மக்கள் முடிவு
ADDED : மார் 24, 2026 01:45 AM

திருநெல்வேலி: மீன் கழிவு ஆலைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி-திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள பொட்டலூரணி பகுதியில் 3 மீன் அரவை ஆலைகள் செயல்படுகின்றன. இவ்வாலைகளில் மீன் கழிவுகளை பயன் படுத்தி கால்நடை தீவனம் தயாரிக்கும் பணி நடக்கிறது.
இங்கிருந்து வெளியேறும் மாசு மற்றும் கழிவுநீர் காரணமாக கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஆலைகளை அகற்ற வலியுறுத்தி கடந்த லோக்சபா தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர். ஆலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் சங்கரநாராயணன், பொட்டலூரணியைச் சேர்ந்தவர். இப்போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ள அவரை அரசு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்துள்ளது. தற்போது அவர் விடுப்பில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
அவர் கூறியதாவது: கிராமத்தைச் சுற்றியுள்ள மீன் கழிவு ஆலைகளால் இரவு நேரங்களில் தூங்க முடியாத நிலை உள்ளது. காற்று மற்றும் குடிநீர் மாசடைந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலைகளை மூடாவிட்டால் வரும் சட்டசபை தேர்தலை முழுமையாக புறக்கணிக்க உள்ளோம் என்றார்.

