/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரூ.1.61 கோடி மின்கட்டணம் மின் வாரியம் குளறுபடி
/
ரூ.1.61 கோடி மின்கட்டணம் மின் வாரியம் குளறுபடி
ADDED : செப் 05, 2025 12:56 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் வசித்து வருபவர் அங்கன்வாடி பணியாளர் சேபா 43. இவரது கணவர் மாரியப்பன் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளுடன் தந்தையுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 282 ரூபாய் கட்டணம் என குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தார்.
வழக்கமாக மாதம் 500 ரூபாய்க்குள் மட்டுமே மின் கட்டணம் வரும் நிலையில், நேற்று அதிகமாக இருந்ததால் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். மின் ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தபோது, அளவீடு பதிவேற்றத்தில் குளறுபடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கணக்கெடுப்பு திருத்தப்பட்டு, சேபாவுக்கு ரூ.494 மட்டுமே மின்கட்டணம் வந்தது.
மின்வாரிய அதிகாரி கூறுகையில், மின் கணக்கீட்டிற்கு அலைபேசி செயலியை பயன்படுத்துகின்றனர். நேரடியான மின் ஊழியர்கள் இல்லை. அவுட்சோர்சிங் முறையில் ஒரு வீட்டு கணக்கெடுப்புக்கு ரூ.3 வீதம் வழங்கப்படுகிறது. இதில் கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடியால் கட்டணமும் அதிகரித்துள்ளது. அது சரி செய்யப்பட்டு விட்டது என்றார்.