/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லஞ்ச வழக்கில் மின் துறை அதிகாரிகளுக்கு சிறை
/
லஞ்ச வழக்கில் மின் துறை அதிகாரிகளுக்கு சிறை
ADDED : அக் 30, 2025 03:38 AM

திருநெல்வேலி: புதிய வீட்டு மின் இணைப்புக்கு ரூ.7500 லஞ்சம் வாங்கிய மின்துறை அதிகாரிகள் இருவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் கோமதிநாயகம். 2009 ஜூனில் புதிய வீடு கட்டினார்.
அதற்கு மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தார். மின் இணைப்பு வழங்க பெருமாள்புரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வணிக உதவியாளர் உதயகுமார் ரூ.7500 லஞ்சமாக கேட்டனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏ.டி.எஸ்.பி மெக்லரின் எஸ்கால் தலைமையில் போலீசார் இருவரையும் கைது செய்னர்.
வழக்கு திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுப்பையா, இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்

