/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பொறியியல் மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
/
பொறியியல் மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
ADDED : அக் 16, 2024 02:21 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே குளத்தில் தத்தளித்த நண்பரை காப்பாற்ற முயன்ற பொறியியல் கல்லூரி மாணவர், அந்தோணி ஜெபின் (19), தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில், இடலக்குடியைச் சேர்ந்த ஜெபின், பணகுடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து வந்தார். நேற்று மாலை, அவர் தனது நண்பர்களுடன் கருங்குளம் அருகே உள்ள தெப்பக்குளத்தில் குளிக்கச் சென்றபோது, ஒரு நண்பர் ஆழமான பகுதியில் தத்தளித்தார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற ஜெபின், குளத்தின் ஆழத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பழவூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.