/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கண்ணில் மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு
/
கண்ணில் மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு
ADDED : பிப் 05, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே தடியாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி சாந்தி அற்புதமணி 60. அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி 6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார்.
இவர்களது மகன், மகள்கள் வெளியூரில் வசிக்கின்றனர். கணவன்,- மனைவி இங்குள்ளனர். நேற்று அந்தோணி வெளியூர் சென்றிருந்தார்.
வீட்டில் சாந்தி தனியாக இருந்தார். வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் சாந்தி முகம், கண்களில் மிளகாய் பொடி துாவினார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.