/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தகரா றில் விவசாயி கொலை நண்பர்கள் மூவருக்கு ஆயுள்
/
தகரா றில் விவசாயி கொலை நண்பர்கள் மூவருக்கு ஆயுள்
ADDED : பிப் 11, 2025 07:51 AM

திருநெல்வேலி, : பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே மருதம்புத்துார் -நாலாங்குறிச்சி சாலையில் தோட்டத்தில் வீடு அமைத்து இருந்தவர் ராமையா 33. இந்நிலையில் 2018 ஏப்.6 ல் விவசாயி ராமையா மற்றும் அவரது நண்பர்கள் அருள்ராஜ் 46, தாமரை 29, சுந்தர் 27, இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது.
இதில் மூவரும் சேர்ந்து ராமையாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி 4வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது.இதில் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராபின்சன்ராஜ் தீர்ப்பளித்தார்.

