/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போதை நபரை கொன்ற தந்தை, அண்ணன் கைது
/
போதை நபரை கொன்ற தந்தை, அண்ணன் கைது
ADDED : ஜூலை 13, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:போதையில் தகராறு செய்தவரை அடித்துக் கொன்ற அண்ணன், தந்தை கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, கக்கன்நகரை சேர்ந்தவர் செல்லப்பா, 77. இவரது மகன்கள் இசக்கிமுத்து, 44, மகாராஜன், 39; கட்டட தொழிலாளர்கள். மகாராஜன், குடிபோதையில் தகராறு செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் இருந்த மகாராஜன், அண்ணன் இசக்கிமுத்து, தந்தை செல்லப்பாவுடன் தகராறு செய்தார்.
தந்தையும், அண்ணனும் தாக்கியதில், மகாராஜன் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் இறந்தார். செல்லப்பா, இசக்கிமுத்து ஆகியோரை பாளை., போலீசார் கைது செய்தனர்.