/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மதுவில் விஷம் கலந்து குடித்த தந்தை பலி மருத்துவமனையில் குழந்தை
/
மதுவில் விஷம் கலந்து குடித்த தந்தை பலி மருத்துவமனையில் குழந்தை
மதுவில் விஷம் கலந்து குடித்த தந்தை பலி மருத்துவமனையில் குழந்தை
மதுவில் விஷம் கலந்து குடித்த தந்தை பலி மருத்துவமனையில் குழந்தை
ADDED : நவ 08, 2024 02:23 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நெடுவிளையைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் பால் தினகரன் 38. இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.
பால் தினகரன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு ஊதாரித்தனமாக இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை கண்டித்தனர். மனமுடைந்த பால் தினகரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் குளிர்பான பாட்டிலில் மதுவை விஷம் கலந்து குடித்தார். குளிர்பானப்பாட்டிலில் விஷம் கலந்த மது மீதம் இருந்தது. அவரது மூன்றாவது குழந்தை அதை தெரியாமல் எடுத்து குடித்தது. இதில் இருவரும் மயக்கமடைந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பால் தினகரன் இறந்தார். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. களக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.