/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மகன் விபத்தில் இறந்த இடத்தில் உயிர்விட்ட தந்தை
/
மகன் விபத்தில் இறந்த இடத்தில் உயிர்விட்ட தந்தை
ADDED : நவ 24, 2024 02:25 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் மகன் விபத்தில் இறந்த சோகத்தில் இருந்த தந்தை , மகன் இறந்த இடத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி ஜங்ஷன் பாலபாக்யா நகரை சேர்ந்தவர் ஜெயராமன் 63. நெடுஞ்சாலைத் துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் விக்னேஷ்ராஜா, 2017ல் மதுரை -- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே விபத்தில் பலியானார். மகன் இறந்ததற்கு பிறகு ஜெயராமனும் அவரது மனைவியும் மனமுடைந்தனர். ஜெயராமன் மகன் நினைப்பாகவே இருந்தார்.
நேற்று முன்தினம் ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் மகன் விபத்தில் சிக்கிய பகுதிக்கு வந்த ஜெயராமன் கையோடு கொண்டு வந்திருந்த மதுவில் விஷம் கலந்து குடித்து அங்கேயே இறந்தார். பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர்.