sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 மாமனாரான எஸ்.ஐ.,க்கு வெட்டு: தகராறில் மருமகன் வெறிச்செயல்

/

 மாமனாரான எஸ்.ஐ.,க்கு வெட்டு: தகராறில் மருமகன் வெறிச்செயல்

 மாமனாரான எஸ்.ஐ.,க்கு வெட்டு: தகராறில் மருமகன் வெறிச்செயல்

 மாமனாரான எஸ்.ஐ.,க்கு வெட்டு: தகராறில் மருமகன் வெறிச்செயல்


ADDED : பிப் 11, 2026 07:16 AM

Google News

ADDED : பிப் 11, 2026 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: குடும்பத்தகராறில், மாமனாரான எஸ்.ஐ.,யை அரிவாளால் வெட்டிய மருமகனை, போலீசார் தேடுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, செம்பாடையைச் சேர்ந்தவர் நந்தகோபால், 52; உளவு பிரிவு சி.ஐ.டி., போலீசில் எஸ்.ஐ.,யாக உள்ளார். இவரது மகளுக்கும், வள்ளியூர், குமாரபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த சந்தனச்செல்வனுக்கும், 2024 டிசம்பரில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், 2025 ஜன., 24ல் தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னையில், நந்தகோபால், நீதிமன்றத்தில் தீர்வு காண்பதாக கூறி, மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சந்தனச்செல்வனின் தாய் முத்துலட்சுமி, உறவினர்கள், சமாதான பேச்சுக்காக நந்தகோபால் வீட்டிற்கு சென்றனர். அப்போது, நந்தகோபாலுக்கும், சந்தனச்செல்வனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சந்தனச்செல்வன் கையில் வைத்திருந்த ஸ்டம்ப்பால், நந்தகோபாலை தாக்கியதுடன், அரிவாளால் அவரது தலையில் வெட்டினார்.

இதில், காயமடைந்த நந்தகோபால், வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பணகுடி போலீசார், சந்தனச்செல்வனை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us