/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தந்தை கொலை: மகள் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்
/
தந்தை கொலை: மகள் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்
ADDED : மார் 24, 2026 02:04 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தந்தை கொலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் விரக்தியில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் 55. இவர் சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டார்.
கொலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் போலீசார் ஆறுமுகத்தின் மகள் பேபி கனி, மகன் அருண்குமார் உள்ளிட்ட குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையில் விசாரணை மேற்கொண்டனர். இதனால் விரத்தி அடைந்த பேபி கனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடல்களும் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.
ஆறுமுகம் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று அவர்களது உறவினர்கள் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின் கலெக்டர் சுகுமாரிடம் மனு அளித்தனர்.

