/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை தந்தை, மகனை 2 நாள் விசாரிக்க அனுமதி
/
மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை தந்தை, மகனை 2 நாள் விசாரிக்க அனுமதி
மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை தந்தை, மகனை 2 நாள் விசாரிக்க அனுமதி
மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை தந்தை, மகனை 2 நாள் விசாரிக்க அனுமதி
ADDED : ஆக 12, 2025 03:46 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலையில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை முன்னாள் எஸ்.ஐ., சரவணனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தீண்டாமை தடுப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.
திருநெல்வேலியில் ஜூலை 27 ல் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதாகி திருநெல்வேலி சிறையில் இருக்கும் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோர் நேற்று தீண்டாமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு அளித்திருந்தனர். சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு அனுப்பினால் பாதுகாப்பு இல்லை என சுர்ஜித் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதாடினர். நேற்று காலை 11:30 மணிக்கு நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட தந்தை, மகன் மாலை 6:30 மணி வரை இருந்தனர்.
முடிவில் இருவரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அனுமதியளித்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி ஆஜராகினர். நாளை மாலை 6:00 மணிக்கு அவர்களை மீண்டும் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.