/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அம்பையில் தெரு தெருவாக சுற்றித்திரியும் கரடியால் பீதி
/
அம்பையில் தெரு தெருவாக சுற்றித்திரியும் கரடியால் பீதி
அம்பையில் தெரு தெருவாக சுற்றித்திரியும் கரடியால் பீதி
அம்பையில் தெரு தெருவாக சுற்றித்திரியும் கரடியால் பீதி
ADDED : ஜூலை 02, 2025 08:01 AM
அம்பாசமுத்திரம், : அம்பாசமுத்திரத்தில் தெருத்தெருவாக சுற்றித்திரியும் கரடியால் மக்கள் அச்சமடைந்துஉள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களக்காடு -- முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விலங்குகள் அவ்வப்போது மலையடிவார கிராமங்களுக்கு வருவது உண்டு. சில தினங்களுக்கு முன் ஆத்தங்கரை பள்ளிவாசல், புலிமான்குளம் பகுதியில் கரடி உலவியது. காரியாண்டியில் வாழை தோட்டத்திற்குள் புகுந்து விவசாயியை தாக்கியது.
அதை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருக்கின்றனர். இன்னும் சிக்கவில்லை. இதற்கிடையே அம்பாசமுத்திரத்தில், சுப்பிரமணியபுரம் பகுதி தெருக்களில் நேற்று முன்தினம் இரவில் கரடி சுற்றித்திரிந்தது.
அதை நாய்கள் துரத்தின. இதை பொதுமக்கள் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த கரடியை பிடிக்க வேண்டும் என, வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.