/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
/
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
ADDED : ஏப் 13, 2025 03:28 AM

திருநெல்வேலி: கடத்தல் வழக்கில் கைதானவரின் காரை மீட்க உதவுவதாகக் கூறி ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதென்காசிமாவட்டம் கடையம் பெண் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா 47, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த மணி மகன் செல்வகுமார். கடையம் போலீஸ் ஸ்டேஷனில் இவர் மீதான ஆள் கடத்தல் வழக்கில் கைதானார். நிபந்தனை ஜாமினில் தினமும் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.
அவரிடம் கடையம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, கடத்தல் வழக்கை விரைந்து முடிக்கவும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மீட்பதற்கு உதவுவதாக கூறி ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி.,பால் சுதர் தலைமையில் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வகுமாரிடம் கொடுத்தனர். நேற்று கடையம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து ரூ.30 ஆயிரத்தை மேரி ஜெமிதாவிடம் அவர் கொடுத்தார்.
அப்பணத்தை வாங்கிய இன்ஸ்பெக்டரை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

