/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
டாஸ்மாக் பாரில் நிதி நிறுவன ஊழியர் கொலை; 2 பேர் கைது
/
டாஸ்மாக் பாரில் நிதி நிறுவன ஊழியர் கொலை; 2 பேர் கைது
டாஸ்மாக் பாரில் நிதி நிறுவன ஊழியர் கொலை; 2 பேர் கைது
டாஸ்மாக் பாரில் நிதி நிறுவன ஊழியர் கொலை; 2 பேர் கைது
ADDED : மே 01, 2025 12:54 AM
திருநெல்வேலி:ஆழ்வார்குறிச்சி அருகே, டாஸ்மாக் மதுக்கூடத்தில், நிதி நிறுவன ஊழியரை, மதுபாட்டிலால் அடித்துக் கொலை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே அடைச்சாணியை சேர்ந்த மாரிமுத்து, 30; தனியார் நிதி நிறுவன ஊழியர். கடந்த ஆண்டுதான், இவருக்கு திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம், துப்பாக்குடி டாஸ்மாக் மதுக்கூடத்தில், மது அருந்தினார். அவரிடம், பிரம்மதேசத்தைச் சேர்ந்த வேல்முருகன், பட்டுசாமி, ராஜபாண்டி ஆகியோர் 'ஓசி'க்கு சிகரெட் கேட்டனர்.
அவர், கொடுக்காததை அடுத்து, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மாரிமுத்து தன் சகோதரர் ஹரியை, மொபைல் போனில் மதுக்கூடத்திற்கு அழைத்தார். அவர் வந்த பின், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், எதிர்தரப்பினர், மாரிமுத்துவின் தலையில் மது பாட்டிலால் தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
கொலை தொடர்பாக வேல்முருகன், ராஜபாண்டி ஆகியோரை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்தனர். பட்டுசாமிக்கு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

