ADDED : ஜூலை 04, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி பரணி நகரில் வாழைத்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 750-க்கு மேற்பட்ட வாழை மரங்கள் கருகின.இதை கண்டு விவசாயி கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
பரணி நகரை சேர்ந்தவர் சாலைகுமார் . இவரது நிலத்தில் முருகன் என்பவர் ஒரு ஏக்கருக்கு அதிகமான பரப்பில் வாழை சாகுபடி செய்திருந்தார். பெரும்பாலான மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று தோப்பில் தீப்பற்றியது. பலத்த காற்றால் மளமளவென பரவிய தீயால் 750-க்கு மேற்பட்ட வாழை மரங்கள் கருகின. தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இதை கண்ட விவசாயி முருகன் கதறி அழுதார்.அருகில் இருந்த முள் காட்டுக்கும் தீ பரவியது. யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
