/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாவு மில் உரிமையாளர் கடத்திக்கொலை: மூவர் கைது
/
மாவு மில் உரிமையாளர் கடத்திக்கொலை: மூவர் கைது
ADDED : ஜன 07, 2026 05:26 AM
திருநெல்வேலி: வீரவநல்லுாரை சேர்ந்த மாவு மில் உரிமையாளரை காரில் குற்றாலத்துக்கு கடத்தி சென்று கொலை செய்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுாரை சேர்ந்தவர் ராம்குமார் 48. மாவு மில் மற்றும் வாடகை பாத்திர கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் இவரது கடைக்கு எதிரே டெய்லர் கடை நடத்தி வரும் கவுதம் 22, மற்றும் அங்குள்ள கோழிக்கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன் 30 ஆகியோர் காரில் இவரை குற்றாலத்திற்கு கடத்தி சென்றனர்.
அங்கு அரசு மகளிர் கல்லுாரி அருகே உள்ள தனியார் லாட்ஜில் ராம்குமாரை அடைத்து வைத்தனர். குடிபோதையில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பினர்.கணவர் வீடு திரும்பாததால் ராம்குமார் மனைவி உஷாராணி, வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். ராம்குமாரை காரில் கூட்டிச் சென்றவர்கள் குறித்து விசாரித்த போலீசார் பின்னர் அவர் குற்றாலத்தில் கொலை செய்யப்பட்டதை அறிந்தனர்.
கவுதமை, ராம்குமார் அடிக்கடி கேலி கிண்டல் செய்தாராம். இதனால் அவர் நண்பர்களான மணிகண்டன் மற்றும் 17 வயது நபருடன் சேர்ந்து காரில் கடத்திக் கொலை செய்தது தெரியவந்தது. குற்றாலம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

