/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வேலியில் சிக்கிய கரடி குட்டி வனத்துறை போராடி மீட்பு
/
வேலியில் சிக்கிய கரடி குட்டி வனத்துறை போராடி மீட்பு
வேலியில் சிக்கிய கரடி குட்டி வனத்துறை போராடி மீட்பு
வேலியில் சிக்கிய கரடி குட்டி வனத்துறை போராடி மீட்பு
ADDED : மே 07, 2025 02:00 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, பொட்டல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது மலையடிவார குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களுக்கு வருகின்றன.
கல்லிடைக்குறிச்சி, சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்தது. நேற்று கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் மணிமுத்தாறு 80 அடி கால்வாய் அருகே தனியார் மாந்தோப்பில் தோட்டத்தில் இரை தேடி குட்டியுடன் கரடி ஒன்று சுற்றித் திரிந்தது.
அப்போது அந்த கரடி குட்டி தோட்டத்தில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கியது. கரடி குட்டி அதிக சத்தம் போடவே அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அம்பாசமுத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் வேலியில் சிக்கியிருந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் கரடி குட்டியை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பத்திரமாக வேலியில் இருந்து விடுவித்தனர். தொடர்ந்து அந்த கரடி குட்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.