sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

முன்னாள் எஸ்.ஐ., கொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; அலட்சிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

/

முன்னாள் எஸ்.ஐ., கொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; அலட்சிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

முன்னாள் எஸ்.ஐ., கொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; அலட்சிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

முன்னாள் எஸ்.ஐ., கொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; அலட்சிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

29


UPDATED : மார் 19, 2025 05:51 PM

ADDED : மார் 19, 2025 02:20 PM

Google News

UPDATED : மார் 19, 2025 05:51 PM ADDED : மார் 19, 2025 02:20 PM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை விவகாரத்தில், தேடப்பட்டு வந்த குற்றவாளி, போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனையடுத்து அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.



திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன், 60; சென்னையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் நேற்று அதிகாலை, திருநெல்வேலி டவுன் வழுக்கோடை அருகேயுள்ள மசூதியில் தொழுகை முடித்து, ஜாஹிர் உசேன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை நான்கு பேர் கும்பல் ரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றது.

சில தினங்களுக்கு முன், ஜாஹிர் உசேன் முதல்வரின் பார்வைக்கு என, ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், 'என்னை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு சுற்றி வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என குற்றம் சாட்டி இருந்தார்.

இது குறித்து சட்டசபையில் அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. 'ஜாஹிர் உசேன் 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். முறையாக விசாரணை நடத்தப்படவில்லை' என சட்டசபையில் பேசிய இ.பி.எஸ்., குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு, 'இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன்னிறுத்தப் படுவார்கள்' என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Image 1394327

இந்நிலையில், ஜாஹிர் உசேன் கொலை சம்பவத்தில் ஏற்கனவே அவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பட்டுள்ளது என மாநகர போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு


இச்சம்பவம் தொடர்பாக முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடி வந்தனர். அவர், பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது தலைமைக் காவலர் ஆனந்த் என்பவரை குற்றவாளி போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டு முகமது தவுபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர் .






      Dinamalar
      Follow us