/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.50 ஆயிரம் மோசடி
/
பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.50 ஆயிரம் மோசடி
பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.50 ஆயிரம் மோசடி
பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.50 ஆயிரம் மோசடி
ADDED : ஜன 02, 2026 02:08 AM

நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து கட்டட தொழிலாளியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அஞ்சுகிராமம் அருகே தெற்கு கருங்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ராஜ். அஞ்சு கிராமத்தில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு துவக்கி ஏ.டி.எம்., கார்டு பெற்றுள்ளார். நேற்று முன்தினம் ராஜ் பணம் எடுக்க அப்பகுதி ஏ.டி.எம்., மையம் சென்றார்.
அங்கிருந்த நபர் ராஜிடம் பேச்சு கொடுத்து பணம் எடுக்க உதவுவதாக கூறினார். மேலும் அவரிடம் ஏ.டி.எம்., கார்டை வாங்கி மிஷினில் சொருகி பணம் எடுப்பது போல் பாவனை செய்து விட்டு நெட் ஒர்க் பிரச்னையால் பணம் எடுக்க இயலாது எனக்கூறி வேறொரு ஏ.டி.எம்., கார்டை கொடுத்தார். கார்டை பெற்றுக்கொண்டு ராஜ் வெளியே வந்த போது அவரது அலைபேசியில் ரூ.50 ஆயிரம் எடுத்ததாக தகவல் வந்தது.
இதுகுறித்து அவர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மூன்று பேர் சேர்ந்து இம்மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

