/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
டாக்டரை தாக்கி நகை பறித்த ஓரினச்சேர்க்கை கும்பலுக்கு வலை
/
டாக்டரை தாக்கி நகை பறித்த ஓரினச்சேர்க்கை கும்பலுக்கு வலை
டாக்டரை தாக்கி நகை பறித்த ஓரினச்சேர்க்கை கும்பலுக்கு வலை
டாக்டரை தாக்கி நகை பறித்த ஓரினச்சேர்க்கை கும்பலுக்கு வலை
ADDED : டிச 14, 2025 02:44 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் டாக்டரை சரமாரியாக தாக்கி நகை, பணத்தை பறித்த ஓரினச்சேர்க்கை கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் டாக்டர் அஜித்குமார், 27. நண்பரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க துாத்துக்குடிக்கு வந்திருந்தார். பின், நண்பரை சந்திக்க திருநெல்வேலி வந்தார்.
ஓரினச்சேர்க்கை யாளர்கள் பயன்படுத்தும் 'கிரைண்டர் ஆப்' மூலம் சிலர் அவரை மொபைல்போனில் அழைத்துள்ளனர்.
அங்கு வந்த அவரை, ஒரு நபர் பைக்கில் ரெட்டியார்பட்டி - மேலப்பாளையம் சாலை அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த மூன்று பேர் அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த, 4 சவரன் தங்க செயின், ஏ.டி.எம்., கார்டை பறித்து சென்றனர்.
பின் அருகிலிருந்த ஏ.டி.எம்., மையத்துக்கு சென்று, 48,000 ரூபாய் பணத்தை எடுத்து தப்பினர். மேலப்பாளையம் போலீசார், ஓரினச்சேர்க்கை கும்பலை தேடி வருகின்றனர்.