/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போலீசை வெட்டிய இருவருக்கு 'குண்டாஸ்'
/
போலீசை வெட்டிய இருவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூலை 20, 2025 03:23 AM

திருநெல்வேலி,:திருநெல்வேலியில் போலீஸ்காரரை வெட்டிய இருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முஹம்மது ரஹ்மத்துல்லா, 28. இவர், ஜூன் 22ல் திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்திற்கு, தன் மனைவியுடன் வந்திருந்தார்.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூடியிருந்த அங்கு ஒரு கும்பல் ஒருவரை அரிவாளால் வெட்டியது. அங்கு சாதாரண உடையில் இருந்த ரஹ்மத்துல்லா, அவர்களை தட்டிக்கேட்டார். அவர்கள் ரஹ்மத்துல்லாவை வெட்டினர்.
இச்சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தொடர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹரி சுப்பிரமணியன் 20, பார்த்திபன், 20, ஆகியோர், நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.